நக்கீரன் கைதை வரவேற்ற டிடிவி தினகரன் !

விளம்பரங்கள்

 

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார்.பேராசிரியை நிர்மலா தேவி கைது தொடர்பான செய்தியில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.அனைவரும் நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக இன்று கருத்துகூறிவந்த நிலையில்,தினகரன் மட்டும் இவ்வாறு கூறியுள்ளார்.இதனால் அவர் பாஜக பக்கம் சாய்கிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

 

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: