அந்தமான் நிக்கோபாரில் நிலநடுக்கம் !

விளம்பரங்கள்

A massive magnitude 7.6 quake struck in the Indian Ocean off India's Andaman Islands, triggering a tsunami watch for India, Myanmar, Indonesia, Thailand and Bangladesh, the U.S. Geological Survey reported on Monday. REUTERS/Graphics
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இத்தீவுகள் வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ளது.

மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் அதிகாலை 03.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதால் ,அனைவரும் பீதி அடைந்தனர்.

தூக்க கலக்கத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் நின்றனர். நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஒருமாதமாக இந்தோனேசியாவில் நிலநடுக்கமும் சுனாமியும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தமான் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அருகே அமைந்துள்ளன.இதனால் இங்கேயும் சுனாமி வருமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

இப்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: