நிஜத்திலும் காதலா ?? மறுக்கும் “96” பட ஜோடி !

விளம்பரங்கள்

“96” படத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கரும் ,கௌரியும் நிஜத்திலும் காதலிப்பதாக வந்த செய்திகளுக்கு இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர் .

சமீபத்தில் திரைக்கு வந்து கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் “96” படத்தில்,விஜய் சேதுபதி திரிஷாவின் இளம் வயது கதாபாத்திரங்களாக நடித்தவர்கள் நடிகர் ஆதித்யா பாஸ்கரும் ,நடிகை கௌரியும் ஆவர். ஆதித்யா பாஸ்கர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆவார்.96 படத்தில் அருமையாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றனர் இருவரும்.

இந்நிலையில்,ஆதித்யா பாஸ்கரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றின் மூலம் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின.இதுகுறித்து விளக்கமளித்துள்ள இருவரும், அது உண்மையில்லை எனவும் ,இருவருக்கும் இடையே உன்னதமான நட்பு மட்டுமே உள்ளது என தெரிவித்தனர்.

இதற்கு ஜானுவாக நடித்த கௌரியின் ரசிகர் பட்டாளம் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: