நடிகர் விஜய் தந்தைக்கு முன்ஜாமீன் !!

விளம்பரங்கள்

கடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்துக்கள் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

‘மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது’ என்று சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்பேசியிருந்தார்.

இந்து அமைப்பின் சார்பில் இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மத உணர்வை புண்படுத்தியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார் சந்திரசேகர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு தாரர் சார்பில் வக்கீல் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: