தந்தி டிவியை கண்டித்த கார்த்திக் சுப்புராஜ் !!

விளம்பரங்கள்

“பேட்ட” திரைப்படத்தின் கசிந்த ஸ்டில்ல்களை டிவியில் ஒளிபரப்பிய தந்தி டிவிக்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் “பேட்ட “.கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.விஜய் சேதுபதி,நவாஸுதீன் சித்திக் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.அனிருத் இசையமைக்கிறார் .
இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரு வரவேற்ப்பையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே உருவாக்கின.

இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகிறது .இதனை செய்தியாக ஒளிபரப்பிய தந்தி டிவி ,அந்த காட்சிகளையும் வெளியிட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர் .

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் .தனது படக்குழுவினரும் இதுபோல் காரியங்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: