ஆண்டாள் விவகாரம் : சின்மயி மூலம் பழிவாங்கபடுகிறாரா வைரமுத்து ??

விளம்பரங்கள்

 

பாடகி சின்மயி ட்விட்டரில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். மேலும் இன்று பல வருடங்களுக்கு முன்பு தன்னை தனியாக ஹோட்டல் ரூமிற்கு வர சொன்ன சம்பவம் பற்றி கூறியுள்ளார் அவர்.

இது நடந்து 13 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று அவர் கூறியுள்ள நிலையில், அதன் பின் நடந்த திருமணத்தின் போது ஏன் வைரமுத்துவின் காலில் விழுந்தீர்கள் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, “அப்போது என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரியாது. வைரமுத்துவின் மகன்கள் இருவரும் எங்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்களை அழைக்கும்போது அவர்களின் அப்பா வைரமுத்துவை எப்படி அழைக்காமல் விட முடியும்” என கூறியுள்ளார்.

வைரமுத்து ஆண்டாள் விவகாரத்தில் பேசியதற்காக , அவரை பழிவாங்கவே சின்மயி தூண்டிவிடப்பட்டுளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . இல்லையென்றால் இத்தனை வருடங்கள் கழித்து ஏன் திடீரென்று இந்த புகாரை கிளப்ப வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: