பாராட்டுகளை குவிக்கும் பரியனும் கருப்பியும் !

விளம்பரங்கள்

கடந்த வாரம் வெளியான “பரியேறும் பெருமாள் ” மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.நிலம் புரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார் .சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.கதிர்,ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளார்.இப்படம் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும்,ஓட்டுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் காட்சிப்படுத்தியுள்ளது.

வெளியான முதல் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது இப்படம்.ஆரம்பத்தில்,குறைந்த திரையரங்குகளில் வெளியான இப்படம்.போக போக தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.பல தரப்பட்ட மக்களும் இப்படத்தித்தனை சாதி வேறுபாடு மறந்து, பாராட்டி வருகின்றனர்.படத்தில் பல காட்சிகள் மனதை கசக்கும் வண்ணம் அமைத்துள்ளது.அதுவும், பரியன் அப்பா காலேஜ்க்கு வரும் சீன் கண்ணீரை வரவைக்கும்.இருப்பினும் இப்படத்திற்கு சிலர் எதிர்ப்பும் காட்டி வருகின்றனர்.

திரையுலகை சேர்ந்த கமலஹாசன்,விஜய் உள்ளிட்டோரும் படத்தினை புகழ்ந்துள்ளனர்.ஆனந்த விகடன் பத்திரிகை இப்படத்திற்கு 58 மதிப்பெண்கள் வழங்கியுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: