தாத்தாவான அன்புமணி ராமதாஸ் !!

விளம்பரங்கள்

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தாத்தாவாகியுள்ளார்.பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.

அன்புமணி ராமதாஸ் – சௌமியா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சம்யுக்தாவுக்கும், ப்ரித்தீவனுக்கும் திருமணம் நடைப்பெற்றது.அவர்களுக்கு புதன்கிழமை அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.அன்புமணி தாத்தாவாகியுள்ளார், ராமதாஸ் கொள்ளுதாத்தாவாகியுள்ளார் .தாயும், சேய்களும் நலமாக உள்ளனர். இரட்டை குழந்தை பிறந்துள்ளதால் ராமதாஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர் . தமிழகம் முழுவதும் பாமகவினர் இதனனைக் கொண்டாடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: