கூவத்தூரில் எடுத்த வீடியோ ? வெளியிடுவாரா கருணாஸ் ??

விளம்பரங்கள்

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ கருணாஸிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ,கட்சி தாவல் தடை சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு கருணாஸ்க்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். கருணாஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அரசு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு என்கிற நாடகத்தை அரங்கேற்ற முயற்சித்து வருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.கருணாஸ் எம்.எல்.ஏ பதவியை பறிக்க கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதில் டி.டி.வி தினகரன் கூட அமைதியாக இருந்து வருகிறார். ஆனால் ஸ்டாலின் மற்றும் தி.மு.கவினர் தான் ஆர்வத்துடன் இருக்கின்றனர். காரணம் கருணாஸ் வைத்திருக்கும் கூவத்தூர் வீடியோ தான் என்கின்றனர். எப்படியாவது கருணாசிடம் பேசி வீடியோவை வெளியிட வைத்துவிட்டால் போதும், எடப்பாடி அரசை ஒரு நாளில் கலைத்துவிடலாம் என்பது தான் தி.மு.கவின் பிளானாம் .

இதனால் தான் கருணாஸ்க்கு தி.மு.கவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: