விளையாட்டு ஹேக் செய்யப்பட்ட கோலியின் இணையதளம் !!

ஹேக் செய்யப்பட்ட கோலியின் இணையதளம் !!

ஹேக் செய்யப்பட்ட கோலியின் இணையதளம் !! post thumbnail image
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் அதிகாரபூர்வமான இணையதளம் என கூறப்படும் தளம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.விராட் கோலியின் இணையதளம் வங்கதேச ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.நடந்து முடிந்த ஆசிய கோப்பையை இந்திய வென்றது.இறுதி போட்டியில் வந்தேசத்தை வீழ்த்தியது இந்தியா.இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய வங்கதேச வீரர் லிட்டான் தாஸ் ,சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட்டாயினார் .இதனால் சமூக வலைத்தளங்களில் வங்கதேச ரசிகர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில்,விராட் கோலியின் இணையதளம் வங்கதேச ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் லிட்டான் டாஸ் அவுட்டானா புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.”சைபர் செக்யூரிட்டி இன்டெலிஜென்ஸ்” என்ற ஒரு ஹேக்கர் குழு இந்த வேலையை செய்துள்ளது.அந்த புகைப்படங்களில் லிட்டான் தாஸ் அவுட்டாகும் புகைப்படமும்,இந்தியாவை விமர்சித்தும்,ஐசிசியை விமர்சித்தும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தியா ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தடுமாறினாலும், கடைசி பந்தில் வெற்றி பெறவே, வங்கதேசம் பெருத்த ஏமாற்றம் அடைந்தது. அதன் விளைவாகவே இந்த ஹேக்கர் குழு இந்த காரியத்தை செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி