சிலிண்டர் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி !

விளம்பரங்கள்

பெட்ரோல் ,டீசல் விலையையே தாங்கி கொள்ளமுடியாத மக்களுக்கு,கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளன..இதன்படி சென்னையில் இனி இன்று முதல் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 888.50-க்கு விற்கப்படும்.

மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ. 59 மானியம் உள்ள சிலிண்டர்களின் விலையை ரூ. 2.89 அதிகரித்து உள்ளது.இதுகுறித்து அளித்த அறிக்கையில் எண்ணெய் நிறுவனங்கள், “கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படுகிறது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. சர்வதேச விலையில் மாற்றம் ஏற்பட்டதாலும், அன்னிய செலாவணியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாகவும் சிலிண்டர்களின் விலை உயறுகிறது . மானியம் பெறும் சிலிண்டர்களின் விலை ரூ. 2.89 ஆக உயர்த்தப்பட்டுள்ளது ஜிஎஸ்டியால் விலகி ஏறுகிறது . டெல்லியில் மானியம் உள்ள சிலிண்டர்களின் விலை ரூ. 502.4-க்கு விற்கப்படும்.” என்று கூறியுள்ளது.

மேலும் மாத மாதம் மானியமும் உயருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: