செய்திகள்,பரபரப்பு செய்திகள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுl

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுl

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுl post thumbnail image
விதிமுறைகளை மீறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக வைத்த பேனர்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடக்க உள்ளது. இதற்காக வைக்கப்பட்ட பேனர்கள்தான் தற்போது அகற்றப்பட உள்ளது.இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பேசிய டிராபிக் ராமசாமி “அதிமுக பேனர்களை அகற்றிவிட்டதாக ஹைகோர்ட்டில் கூறியது பொய். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் அது. நான் இன்று கூட பார்த்தேன். 700 பேனர் வரை இருக்கிறது.காவல் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். இதை அவர்கள் தட்டி கேட்கவில்லை. அதனால்தான் நீதிமன்றம் தற்போது தலையிட்டு முடிவெடுத்து இருக்கிறது. இந்த கொள்ளைக்கார கூட்டத்திற்கு இது பெரிய பாடம். அவர்கள் எல்லாம் திருந்தினால் நல்லது, இல்லை என்றால் இந்த வழக்கு மூலமே அவர்களை திருந்த வைப்பேன் “என்று அவர் கூறினார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி