மைதானம் மாற்ற படுகிறதா ? பிசிசிஐ மோதல் !

விளம்பரங்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் 2 -வது ஒருநாள் போட்டியானது அறிவிக்கப்பட்டபடி இந்தூர் மைதானத்தில் நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.இந்தூர் ஸ்டேடியம் மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.பிசிசிஐ விதிகளின் படி மைதானத்தில் விற்பனையாகும் டிக்கெட்டுகளில்,90% மக்களுக்கும்,10% ஸ்பான்ஸர்களுக்கும் வழங்க வேண்டும்.அந்த 10%ல் மாநில கிரிக்கெட் வாரியத்துக்கும் பங்குள்ளது.இதற்க்கு தான் மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தூர் ஸ்டேடியத்தில் மொத்தம் 26000 டிக்கெட்டுகள் உள்ளன .அதில் 10% என்ற 2600.விளம்பரதாரர்கள் டிக்கெட் போக 700 டிக்கெட்டுகள் தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வரும்,இதனை நாங்கள் ஏற்று கொள்ள முடியாது.எனவே பிசிசிஐ இதன் விதியினை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில், “போட்டியை வேறு மைதானத்துக்கு மற்ற எங்களுக்கு விருப்பம் இல்லை. அதே மைதானத்தில் நடைபெறும் என்று நம்புகிறோம். ஆனால் பிரச்னை ஆகும் என்றால், வேறு மைதானம் தொடர்பாக பரிசீலிப்போம்” என்றார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: