சின்ன திரை,திரையுலகம் பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !!

பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !!

பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !! post thumbnail image
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவந்த பிக் பாஸ் 2 சீஸனின் வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கப்பட்டுள்ளார் .கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 நடைபெற்று வந்தது.நேற்று ஜனனி வெளியேற்றப்பட்டார். விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் வீட்டில் இருந்தனர். மூவரில் ஒருவரை வெளியே அழைக்க ஆரவ் உள்ளே வந்தார். அவர் ரித்விகாவை அழைத்துச் செல்வதுபோல் பாவனை செய்துவிட்டு விஜயலட்சுமியை அழைத்துச் சென்றார். வெளியே வந்த விஜயலட்சுமி,உள்ளே பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக கூறினார்.

பிறகு போட்டியிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.ஓவியாவும் நிகழ்ச்சிக்கு வந்தார்.அவருடன் அனைவரும் உரையாடினர்.ரித்விகாவையும்,ஐஸ்வர்யாவும் பிக் பாஸ் உடன் உரையாடினர்.பின்னர் கமலஹாசன் வீட்டிற்குள் சென்றார்.உள்ளே சென்று உரையாடிய அவர்,ஆடியன்ஸுக்கு யார் வின்னர் என்று அறிவிக்காமல் டென்ஷன் ஏத்தினார். இறுதியில் மேடைக்கு வந்த அவர், ரித்விகாவின் கையை உயர்த்தி அவர் தான் வெற்றியாளர் என்று அறிவித்தார்.ரித்விகாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. துள்ளிக்குதித்தார். வாழ்க்கையில் முதல்முறையாக வெற்றியடைந்திருப்பதாகக் கூறிய அவர், வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி