புதிய அணியாக மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்தியா !

விளம்பரங்கள்

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகளை கிரிக்கெட் அணி இந்திய அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எதிர் கொள்கிறது .அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.சிலருக்கு ஓய்வும்,புதுமுகங்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ,ஷிகர் தவான் ,முரளி விஜய் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இருவரும் இங்கிலாந்து தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கேப்டன் விராட் கோஹ்லி,ரஹானே ,புஜாரா மிடில் ஆடரை அலங்கரிக்கின்றனர் . காயமடைந்துள்ள பாண்டியாவுக்கு ,புவனேஷ்வர் குமார்,பும்ரா,இஷாந்த் சர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கபட்டுள்ளது.அஸ்வின் ,ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கே.எல். ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும்.

புதுமுகங்கள் மாயங் அகர்வால்,சிராஜ் , பிரிதிவி ஷா ஆகியோருக்கு வாய்ப்பளிப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ரஞ்சி ட்ரோபியில் சிறப்பாக விளாடியவர்கள் ஆவர் .தினேஷ் கார்த்திக் கழட்டிவிடப்பட்டுளார் .ரிஷப பாண்ட் இடத்தை தக்கவைத்துள்ளார்.முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் 4 ஆம் தேதி துவங்குகிறது .

இந்திய அணி : விராத் கோஹ்லி (சி), கே.எல். ராகுல், பிருத்வி ஷா, மாயன்க் அகர்வால்,புஜாரா, ரஹனே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட், ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: