சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!

விளம்பரங்கள்

சுற்றுலா வந்த காதலர்களிடையே சண்டை வந்துவிட்டது.இதனை அறிந்து கொண்ட உள்ளூர் டிரைவர்கள் 2 பேர் அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர்.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவர் வாசுதேவன். திருப்பூரில்வேலை பார்த்து வருகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் தருமபுரியை சேர்ந்த ஒரு பெண் மீது காதல். இருவரும் தீவிரமாக காதலித்தார்கள். கடைசியில் ஏற்காடுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுக்கிறார்கள்.வாசுதேவன் தனது காரில் காதலியை ஏற்றிக் கொண்டு ஏற்காடு வந்து சேர்ந்தார். ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கினார்கள். நள்ளிரவில் ரெண்டு பேருக்கும் சண்டை வந்துள்ளது. ஒருவருக்கொவர் திட்டிக் கொண்டார்கள். சண்டை முற்றிப்போய்விட, வாசுதேவனுடன் கோபித்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தார் அந்த பெண்.இளம்பெண் ரோட்டில் தனியாக வருவதை ஆட்டோ ஒட்டுனர் விஜயகுமார், ஆரோக்கியதாஸ் ஆகியோர் பார்த்தார்கள்.யாரென தெரியாத அவர்களிடம் தான் கதைகளை கூறியுள்ளார் அப்பெண்.

இந்நிலையில்,காதலியை தேடிக்கொண்டு வந்துள்ளார் வாசுதேவன்.அவரை பார்த்த ஓட்டுனர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.அவரிடம் இருந்த வாட்ச், செயின், மோதிரம், சட்டை பையில் இருந்த பணம் எல்லாத்தையும் பறித்து கொண்டனர்.அந்தப்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர் .வாசுதேவன் சுயநினைவு வந்து காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில் பிடிபட்ட அவர்கள், அப்பெண்ணை அவர்கள் ஆட்டோவில் கூட்டிச்சென்று, வேற ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்க வைத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு டிரைவர்களும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் தள்ளப்பட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: