எச்.ராஜா ஒரு தியாகி – அமைச்சர் உதயகுமார் !

விளம்பரங்கள்

நாட்டுக்காக பல தியாகங்கள் செய்து,நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர் எச்.ராஜா என அமைச்சர் உதயகுமார் கூறினார்.அவரையும் கருணாசையும் ஒப்பிட கூடாது என்றும் கூறினார்.

டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர் உதயகுமார் இவ்வாறு கூறியுள்ளார். “எச்.ராஜா, இந்தியாவிலுள்ள 19 மாநிலங்களில் ஆளும், கொள்கை, லட்சியத்தோடு உள்ள மாண்புமிகு பாரத பிரதமர் தலைமையில் இயங்குகின்ற, இந்த தேசத்திற்காக உழைத்த ஒரு இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர். எந்த நிலையில் அந்த இடத்திற்கு வந்திருப்பார்? எத்தனை உழைப்புகள், சேவைகள், தியாகங்களை இந்த நாட்டுக்கு செய்திருப்பார். அவரை கையாளும் விதமும், நேற்று ஒரு இயக்கத்தை துவங்கி, அதிருஷ்டவசமாக சட்டசபை உறுப்பினராகி, இன்று அதிருஷ்டத்தை தொலைத்துவிட்டு, தனக்கு அங்கீகாரம் இல்லையே என்று, மீடியா விளம்பரத்திற்காக உளறுவதை வைத்து அவரையும், இவரையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க கூடாது. இவ்வாறு உதயகுமார் கூறினார் .

அமைச்சர் ஒருவர் பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: