செய்திகள்,முதன்மை செய்திகள் வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !

வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !

வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை ! post thumbnail image
வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 12 % அதிகமாக தமிழகத்தில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .தமிழகத்திற்கு அதிக மழை வழங்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது .அதற்கு இன்று முதலே நல்ல சூழல் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .இது குறித்து அதன் இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில் “வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும்.

இலங்கை முதல் கர்நாடகா வரையிலான வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளது.சத்தியமங்கலத்தில் 9 செமீ , கோபிச்செட்டி பாளையம், கொடைக்கானல், அவினாசி பகுதிகளில் 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது.அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.பலமான காற்றும் வீசும் .மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.” என்று பாலச்சந்திரன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி