அரசியல்,பரபரப்பு செய்திகள் ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா post thumbnail image

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.மியான்மரில் நடைபெற்ற ரோஹிஞ்சா இஸ்லாமியர்களுக்கு மீது நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த பர்மா / மியான்மரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆங் சான் சூச்சிக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1991இல் வழங்கப்பட்டது.கடந்த ஓராண்டாகவே ரோஹிஞ்சா மக்களுக்கு எதிராக வன்முறையால் 7 லட்சம் மக்கள் மியான்மர் விட்டு வெளியேறியுள்ளார் என்றும், அங்கு நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மியான்மர் ராணுவன உயர் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்றும் ஐ.நா கூறியுள்ளது.

2007ஆம் ஆண்டு ஆங் சான் சூச்சிக்கு கனடா கௌரவ குடியுரிமை வழங்கியது. இவ்வாறு கௌரவிக்கப்பட்ட ஆறு பேரில் சூச்சியும் ஒருவர் .சூச்சி கௌரவ குடியுரிமைக்குத் தகுதியானவராக உள்ளாரா என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேள்வி எழுப்பிய மறு நாளே குடியுரிமை பறிக்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி