அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !

விளம்பரங்கள்

நான் அதிமுகவுடன் நெருங்கிவரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு இவரு பதிலளித்துள்ளார்.

எம்ஜியார் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் பழனிசாமி எம்ஜியாரின் திருஉருவ படத்தினை திறந்து வைக்கிறார்.இதில் கலந்துகொள்ள ஸ்டாலின் ,டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் கலந்துகொள்ள போவதில்லை என்று கூறிவிட்டனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் “எனக்கு அழைப்பு வந்தால் கலந்துகொள்ள தயார் ” என்று கூறியிருந்தார்.

இதுபற்றி அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது “விழாவுக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன் என கூறியதன் மூலம் திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார் அவருக்கு பாராட்டுக்கள்” என்றார்..

இதனை மறுத்துள்ள திருமாவளவன் “அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் நெருங்கி வரவில்லை.எம்ஜிஆர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் அவரது விழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டினேன். அமைச்சர் கூறுவதுபோல் அரசியல் ரீதியாக தான் எந்தக் கருத்தும் கூறவில்லை” என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: