அரசியல்,பரபரப்பு செய்திகள் விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !

விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !

விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு ! post thumbnail image
கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பினை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள சிறிசேனா சிங்கள மக்களிடையே உரையாடினார் . அதில் அவர் கூறுகையில் ” கடந்த 2009ஆம் சென்னையில் இருந்தோ ,காடுகளில் இருந்தோ கொழும்பினை வான் வழியாக தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டுருந்தனர் .கொழும்பில் உள்ள பல முக்கிய பகுதிகளை வெடிகுண்டுகள் தாக்கி அழிக்கப்போவதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்தது.

இதையடுத்து ,அப்போதைய அதிபர் ,பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்பு விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.நான் அப்போது தற்காலிக ராணுவ அமைச்சராக இருந்தேன்.நானும் கொழும்பின் ஒரு பகுதியில் ஒளிந்திருந்தேன்.”என்று அவர் கூறினார் .

சென்னையில் இருந்து என்று அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .ராஜிவ் காந்தி கொலைக்கு பிறகு புலிகளை தமிழகத்தில் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விடுதலை புலிகள் Zlin Z3 எனும் விமானத்தை வைத்திருந்தனர் .அதன் மூலம் கொழும்பினை 2007 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.t

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி