முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி !

ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி !

ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி ! post thumbnail image
ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இறுதி போட்டியில் வங்கதேச அணியினை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது இந்தியா.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வந்தது . இதன் இறுதி போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது இந்திய அணி.முதலில் பேட் செய்த வங்கதேச அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் வேகமாக ரன் குவித்தார்.முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 120 ரன்கள் சேர்த்து.மெஹிந்தி ஹசன் 32 ரன்களில் அவுட்டானார் .பிறகு விக்கெட்டுகள் சரிய தொடங்கின .இருப்பினும் , அதிரடியாக ஆடிய லிட்டான் தாஸ் 117 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .இறுதியில் வங்கதேச அணி 222 ரன்களுக்கு ஆல் அவுடானது.இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் ,கேதார் ஜாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்தியா அணியின் தொடக்கமும் அதிரடியாக அமைந்தது.இருப்பினும் தவான் 15 ரன்களிலும் ,ராயுடு 2 ரன்களும் எடுத்து அவுட்டாயினர்.ரோஹித் நிலைத்து விளையாடி 48 ரன்கள் எடுத்து ஆவுட்டனார். பிறகு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் ,டோனி ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார் .அவர்கள் அவுட்டானவுடனே ஜடேஜா ,புவனேஸ்வர் குமார் அணியை மீட்டனர்.இதற்கிடையில் தசை பிடிப்பு காரணமாக Retire Hurt ஆன கேதார் ஜாதவ் ,மீண்டும் விளையடா வந்து அணியின் வெற்றிக்கு கடைசி பால் வரை போராடி வித்திட்டார் .ஆட்டநாயகனாக லிட்டான் தாஸ் தேர்வு செய்யப்பட்டார்.தொடர் நாயகன் விருதை ஷிகர் தவான் தட்டி சென்றார் இறுதியில் ஆசிய கோப்பையை கேப்டன் ரோஹித் சர்மா தனது கரங்களில் பெற்றுக்கொண்டார்.

இது ஆசியக்கோப்பையில் இந்தியாவுக்கு 7வது சாம்பியன் வெற்றியாகும்.இதற்கு முன்பு 2016,2010 ஆம் ஆண்டுகளில் டோனி தலைமையில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி