தேர்தலில் மோசடி செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் : பதவி தப்புமா ?

விளம்பரங்கள்

மோசடியாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது .சென்னை தியாகராயர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. சத்யா என்கிற சத்யநாராயணன். இவர் 3 சட்டமன்ற தொகுதிகளில் தன் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து மோசடி செய்துள்ளதாக சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கூறியுள்ளது .இது குறித்து ஆதாரங்களையும் அந்த இயக்கம் வெளியிட்டுள்ளது.அதன்படி ,சத்யா திருப்பதியில் ஒரு வாக்காளராகவும், தமிழகத்தில் இரு தொகுதிகளிலும் இவர் பெயர் உள்ளது .இது சட்டப்படி குற்றமாகும்.இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும்.இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ள சட்டப்பஞ்சாயத்து இயக்கம் , அவரை தகுதி நீக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளது .

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில்,உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: