செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில் சிக்கிய 60 சிலைகள்!

தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில் சிக்கிய 60 சிலைகள்!

தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில்  சிக்கிய 60 சிலைகள்! post thumbnail image
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 60 சிலைகள் மீட்கப்பட்டன.சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் ரன்வீர் ஷா . இவர் ஆடை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருபவர்,சில படங்களில் நடித்தும் உள்ளார் . இவர் சிலை கடத்தலில் பல காலமாக ஈடுபட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுவுக்கு தகவல் கிடைத்தது .மேலும் ஏற்கனவே சிலை கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள தீனதயாளன் என்பவரும் தகவல்கள் போலீசாரிடம் தெரிவித்திருந்தார் .அதனடிப்படையில் நீதிமன்ற அனுமதியுடன் இன்று சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது .

அதில் வீட்டில் உள்ள ரகசிய அறைகளில் ஏதும் சிக்கவில்லை .ஆனால் அங்கே கட்சிக்கு வைக்கப்பட்ட சுமார் 60 சிலைகள் ,தூண்கள் மீட்கப்பட்டன.இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கூறுகையில் “60 சிலைகள் ,தூண்கள் உட்பட மொத்தம் 89 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.இவையனைத்தும் கோவிலில் வைக்கப்படும் சிலைகள் ஆகும்.இதன் விட்டம்,அகலம் அதிகம்.இவையனைத்தும் பழமையானது மட்டுமலல,தொன்மையானதும் கூட. இவையனைத்தும் ஆலயத்தில் இருந்து திருடப்பட்டவை.பல்வேறு கோவில்களில் திருடப்பட்டவை.எங்கிருந்து திருடப்பட்டது என்று விசாரிக்க வேண்டும்.சிலைகள்அனைத்தும் 100 ஆண்டுகளுக்கு மேலானது . சிலைகளை அருங்காட்சியகத்தில் வைக்க இடமில்லை.எனவே, கும்பகோணத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு அனைத்தையும் எடுத்துச்செல்ல வேண்டும் .விற்பனை உரிமம் இல்லாதவரிடம் சிலைகள் வாங்கியுள்ளார் ரன்வீர் ஷா , அவரிடமும் விற்கும் உரிமம் இல்லை ” என அவர் கூறினார் .

இன்னும் சில நாட்களில் மேலும் பலர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி