எல்ஈடி டிவி ,பேண்ட்,சூட்கேஸ் – இது சியோமி விழா அப்டேட்ஸ் !!

விளம்பரங்கள்

இந்திய சந்தையில் நாளுக்கு நாள் சியோமி நிறுவனத்தின் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.மொபைல் போன் மட்டுமல்லாமல் பேண்ட் ,டிவி என நந்த நிறுவனம் கலக்கி வருகிறது. சியோமி நிறுவனம் “Smart Living” எனும் நிகழ்ச்சியினை பெங்களுருவில் நடத்தியது .அதில் மொபைல் போன் மட்டுமல்லாமல் டிவி,பேண்ட் என பல வகையான பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன .அதைப்பற்றி விரிவாக பார்போம் .Xiaomi Mi LED TV :

Mi LED TV 4C PRO (32-inch), Mi LED TV 4 PRO (55-inch), Mi LED Tv 4A PRO (49-inch) என்று மூன்று புதிய டிவி மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் விலை Mi LED TV 4C PRO (32-inch) – 14,999 ரூபாய், Mi LED TV 4A PRO (49-inch) – 29,999 ரூபாய் ,Mi LED TV 4 PRO (55-inch) – 49,999 ரூபாய் ஆகும்.

இந்த டிவிகளில் ஸியோமியின் ஒரிஜினல் பேட்ச்வால் OS உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோர் உபயோகிக்கும் வசதியும் உள்ளது.சாப்ட்வேர் அனைத்தும் மெருகையேற்றப்பட்டுள்ளது .அமேசான் ப்ரயிம் வசதியும் விரைவில் இணைக்கப்பட உள்ளது .டிவியினை கூகிள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் கண்ட்ரோல் செய்யலாம்.55 இன்ச் டிவியில் 4K விடியோவும் ,16W ஸ்பீக்கரும் ,2GB RAM + 8GB இன்டர்னல் மெமரியும் உள்ளது .மேலும் Wifi ,HDMI,USB Port,HeadPhone ,Ethernet,Bluetooth வசதிகளும் உள்ளன .மற்ற டிவிகளில் 1080p ரெசலுஷன் காட்சித்திரை உள்ளது.

Xiaomi Mi Band 3:


ஏற்கனவே மூன்று வகையான பேண்டுகள் உள்ளன .2015-ல்தான் இந்தச் சந்தைக்குள் வந்ததென்றாலும் இந்திய ஃபிட்னெஸ் பேண்ட் சந்தையின் வருமானத்தில் தற்போது 45.3% பங்கு சியோமி வசம் உள்ளது.புதிதாக வந்துள்ள Mi Band 3 முந்தய பேண்ட்களின் அப்டேட்டட் பேண்டாக உள்ளது .இதில் 0.78 OLED Display,193 ppi resolution உள்ளது.வாட்சப்,வானிலை உள்ளிட்ட நோட்டிபிகேஷனும் பார்க்கலாம்.இதன் பேட்டரி 20 நாட்கள் வரை தாங்கும்.இதன் விலை ரூ.1999 ஆகும்.

Xiaomi Mi Air Purifier 2S:

காற்றினை சுத்தப்படுத்த ஸியோமியால் அறிமுகப்படுத்தப்பட்ட Air Purifier 2 என்பதன் அப்டேட்டட் வெர்சன் தான் இந்த Xiaomi Mi Air Purifier 2S. OLED Display ,வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட வசதிகளும்,இது 400 சதுரஅடி வரை உள்ள காற்றைச் சுத்தப்படுத்தும் . இதன் விலை ரூ.8,999 ஆகும்.

இதுமட்டுமல்லாமல் Mi Home Security Camera 360,Mi Luggage ஆகியவற்றும் அறிமுகப்படுத்தப்பட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: