செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு ! post thumbnail image
முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் செய்த ஆறு பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் அடையாளத்தினை மறைத்து கருத்து கூறுவது என்பது வாடிக்கை . அரசின் மீதோ,தனி மனிதர் மீதோ கருத்துக்களை பதிவு செய்வார்கள்.அதில் சில பதிவுகள் வரம்பு மீறி செல்வதும் உண்டு.அரசுக்கு எதிராக கருத்துக்கூறுவது தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவர் .அதற்கென்ன 24 மணிநேரமும் செயல்படும் கணக்குகளும் உள்ளன .அவர்களுக்கு இந்த வழக்குப்பதிவு கோபமும், பயத்தையும் அளித்துள்ளது.

முதல்வருக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக மீம் போட்டவர்கள்,விமர்சனம் வைத்தவர்களில் சுமார் ஆறு பேர் மீது சைபர் கிரைமில் புகாரளித்துள்ளது அதிமுக தகவல்தொழில்நுட்ப பிரிவு.அதில் அவர்கள் ” முதல்வர் புகைப்படத்தை பயன்படுத்தி மீம் போட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள் ,அவர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இது உள்ளது.எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் “என கூறியுள்ளனர். அவர்கள் புகார் அளித்துள்ள ட்விட்டர் கணக்குகள் “@ThalapathyjaGa5,@HariIndic,@dohatalkies,@Mahesh_SPK,@Meena0hrd,@admkfails,@RajasekarAsho7″ .அவர்கள் மீது IPC504, IPC 505(1),IPC 506(1), IPC 507″” ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விரைவில் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

இதில் ஹரி என்பவர் முன்னாள் அதிமுக தகவல்தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் ஆவார் . ஆனால் தற்போது டிடிவி தினகரன் அணியில் உள்ளார் . சமூக வலைத்தளங்களில் மக்களிடையே பெரும் எதிருப்பெழுந்துள்ளது .இது பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் செயல் என அவர்கள் கூறி வருகின்றனர் . திமுக மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி