திரையுலகம் சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?

சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?

சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ? post thumbnail image

 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார் .NGK என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படம் வேகமாக வளர்ந்து வருகிறது .தீபாவளி கழித்து இப்படம் வெளிவருகிறது .இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் பொமன் இரானி, சமுத்திரக்கனி, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படங்கள் உருவாகின்றன.

இதையடுத்து இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கோங்கராவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .இந்த படமும் இரு மொழிகளில் உருவாகிறது.இதில் நடிக்க அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.இரண்டு நாயகர்கள் நடிக்க உள்ள இக்கதையில், விஜய் தேவரகொண்டா நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் விரும்புகிறாராம் .அவர் தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டுகளை சமீப காலமாக பெற்றுவருகிறார் .தெலுங்கு மார்க்கெட்டும் நன்றக வியாபாரம் ஆகும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனின் கணக்காம் . சூர்யா, விஜய் தேவரகொண்டா இருவரும் பிஸியாக இருப்பதால் அடுத்த சில மாதங்களில் இருவரும் இணைந்து நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி