பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக்கோப்பை இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம் !

விளம்பரங்கள்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம்.இது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது .இதில் பாகிஸ்தான்,வங்கதேச அணிகள் மோதின .இதில் வெற்றிபெறும் அணியே இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ஆரம்பத்தில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது . ஆனால் ரஹீம் ,மிதுன் ஜோடி நிலைத்து நின்று ஆடியது.மிதுன் 60 ரன்களும் ,ரஹீம் துரதிஷ்டவசமாக 99 ரங்களிலும் ஆட்டம் இழந்தனர் .இறுதியில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது .பாகிஸ்தான் தரப்பில் ஜுனைட் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அப்ரிடி ,ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி தடுமாறியது .தொடக்க வீரர் இமாம் உல் ஹக் மட்டும் 83 ரன்கள் எடுத்தார் .மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.அனுபவ வீரர் சோயிப் மாலிக் 30 ரன்கள் எடுத்தார் .இறுதியில் 50 ஒவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது.வங்கதேச தரப்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் சாய்த்தார் .ஆட்ட நாயகனாக ரஹீம் தேர்வுசெய்யப்பட்டார் .

இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை 2018இன் இறுதி போட்டிக்கு வங்கதேசம் முன்னேறியுள்ளது.28ஆம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது .2016ஆம் ஆண்டும் இதே அணிகள் தான் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: