திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்தா ?

விளம்பரங்கள்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார் .பல்வேறு வழகக்குகளை அரசு அவர் மீது திணித்து வேலூர் சிறையில் அடைத்திருந்தது .நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிறைச்சாலையில் நடைபெற்ற துன்புறுத்தல்களே இதற்க்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன .

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐநா சபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி பேசியதற்காக கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி.சுமார் 40 நாட்களுக்கு மேலாக சிறையிலுள்ள அவர் ,தனிமை சிறையில் அடைக்கப்பட்டு மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவரின் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்

இது குறித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” வேலூர் சிறையில் உள்ள ஒரு தனிமைப்படுத்த கட்டிடத்தில் அவர் அடைக்கப்பட்டிருந்தார் ,அதில் உள்ள அறை பல வருடங்களாக பாழடைந்து சுத்தம் செய்ப்படாமல் உள்ளதாகும்.இருள் சூழ்ந்த சுகாதாரமற்ற அறையாகும் அது .எனவே அவர் உடல் ரீதியாகவும் ,மன ரீதியாகவும் பாதிக்கபட்டுளார். ஒருமுறை பாம்பும் வந்துள்ளது .சக கைதிகளையும் சந்திக்க அனுமதிக்கவில்லை .

சிறையினில் வழங்கப்படும் உணவும் தரமற்றதாக இருந்துள்ளது.இதனால் வாந்தி,வயிற்றுப்போக்கு
உள்ளிட்ட உடல் உபாதைகளும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இது போல் ஆனதால்,காற்றோட்டம் இல்லாததாலும் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது .அதனால் ஞாயிற்று கிழமை அன்று சிறையில் இருந்து வேலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .இதுகுறித்து உறவினர்களுக்கு எந்த தகவலும் சிறை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.திங்கள்கிழமை சிறையிற்கு மனு போட்டு சந்திக்க சென்ற போது தான் இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது .

உயிருக்கு ஆபத்தா ??

திருமுருகன் காந்தி மத்திய ,மாநில அரசுகளுக்கு எதிராகவும் , கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக தேசிய அளவில் பேசி வருகிறார் .அவரை ஒடுக்க இந்த சக்திகள் நினைக்கின்றன .அதனால் சிறையில் மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்த படுகிறார் .மூன்று நாட்கள் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொன்னார்கள்.ஆனால் சிறை அதிகாரிகள் உடனேயே டிஸ்சார்ஜ் செய்து கொண்டுசென்றுவிட்டார்கள்.” என மே 17 இயக்கத்தினர் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர் .

இந்த குற்றச்சாட்டுகளை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: