எந்த தகுதியும் இல்லாதவர் : எடப்பாடி மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்

விளம்பரங்கள்

அடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச துளி கூட தகுதி இல்லை என திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சேலத்தில் நடைபெற்ற திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதியையும் கடுமையாக சாடினார் .அவர் கூறுகையில் ” திமுக கட்சி ஒரு குடும்ப கட்சி .கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் ,ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி .அது கட்சி அல்ல ,கம்பெனி” என கடுமையாக விமர்சித்திருந்தார் .

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் ” வரிசையில் தான் நிற்கின்றேன், கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய்சேவை ஆற்றவே!

சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளி கூட தகுதி இல்லை..” என முதல்வர் சசிகலா காலில் விழும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் .இதனை இணையதள திமுகவினர் பாராட்டி ஷேர் செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: