விளையாட்டு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் ??

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் ??

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் ?? post thumbnail image

இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் இந்தியா ,பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் “சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறின . இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.ஹாங்காங் அணியும் பெரிதாக சோபிக்கவில்லை .

சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடிய இரண்டு ஆட்டங்களிலுமே வெற்றி பெற்றுள்ளது.பாகிஸ்தான் ,வங்கதேசம் இரண்டு ஆட்டங்களில் விளையாடி தல ஒரு வெற்றியை பெற்றுள்ளது.ஆப்கானிஸ்தான் இன்னும் வெற்றி கனியை ருசிக்கவில்லை,அதனால் அந்த அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளது.

இன்று நடைபெறும் ஒரு ஆட்டத்தில் , இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது .நாளை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இவ்விரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்குகிறது.இந்தியா ஆப்கானிஸ்தான் ஆட்டமானது வெறும் சம்பிரதாய ஆட்டம் தான்.இந்திய அணி ஏற்கனவே இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுவிட்டது.எனவே முக்கிய வீரர்களுக்கு இன்று ஓய்வளிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது .

பாகிஸ்தான் ,வங்கதேசம் இடையேயான ஆட்டம் மிக முக்கிய போட்டியாகும்.இதில் வெற்றி பெரும் அணியே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும்.சமபலம் உடையே இரு அணிகளும் மோதுவதால் ,ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா , பாகிஸ்தான் போட்டிகளுக்கு இணையாக இந்த போட்டி வங்கதேச ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.எனவே ஆட்டத்தில் அனல் பறக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்பாக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி