முடிவுக்கு வந்தது கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் வழக்கு !!

விளம்பரங்கள்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி தீர்ப்பு வழங்ப்பட்டுள்ளது .இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது .

வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால், கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். வீரப்பனுடன் பணயக்கைதியாக 108 நாட்கள் காட்டில் இருந்தார் ராஜ்குமார் .பிறகு தூதர்களின் தலையீ ட்டால் விடுவிக்கப்பட்டார்.வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் 14 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.2004-ம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில்,கடந்த 18 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.அதில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தவிர்த்து,ஒருவர் வழக்கு நடைபெறும் போது இறந்து போனார் .ஒருவர் தலைமறைவானார் .இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது .இதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் .

இன்று நீதிமன்றத்தில் எட்டு பேர் ஆஜராகினர் .ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை .தீர்ப்பை வாசித்த நீதிபதி “போதிய ஆதாரங்கள் இல்லை என்பதாலும், வீரப்பனுக்கும் வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டவர்களுக்கும்
உள்ள தொடர்பினையும் நிரூபிக்காததாலும் ,இவ்வழக்கில் சம்பத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் “என அறிவித்தார் .18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: