பெரிதாகிறது குட்கா ஊழல் ! கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !

விளம்பரங்கள்

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய குட்கா ஊழலில் , உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா குடோனில் நடைபெற்ற சோதனையில் நிறைய ஆவணங்கள் சிக்கின.அதன் மூலம் அமைச்சர் விஜய பாஸ்கர்,டிஜிபி ராஜேந்திரன் ,முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சில அரசு அதிகாரிகளின் பெயரும் அடிபட்டன.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டன .லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து வந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது .குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனராக பணிபுரிந்த மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது சிபிஐ.

தொடர்ந்த விசாரணையில் பங்குதாரர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டனர் .குட்கா குடோனில் நடைபெற்ற பொது கைப்பற்றப்பட்ட குட்கா சோதனைக்கு அனுப்பப்பட்டது .அதனை சோதித்த உணவு பாதுகாப்பு அதிகாரியான சிவகுமார் ,அவை போதை பொருளே இல்லை என அறிக்கை அளித்திருந்தார்.இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிற்று. இதனையே முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்ம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், பொய்யான அறிக்கை தாக்கல் செய்தது தொடர்ப்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரம் தெரிவிக்கறது.சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 4ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: