நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது – ஆளுநரை சந்தித்த எச்.ராஜா

விளம்பரங்கள்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறை ,நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்,அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் நீதிபதி சி.டி.செல்வம் அமர்வுக்கு கிடையாது என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார் .

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறை ,நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது .இது மிகப்பெரிய சர்ச்சையானது .அரசியல் கட்சி தலைவர்களும்,பொது மக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர் . இதையடுத்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதனை வழக்காக எடுத்துக்கொண்டது .தமிழக காவல்துறையும் ராஜாவை பிடிக்க தனி படை அமைத்தது.ஆனால் அவர் வழக்கம் போல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.எஸ்.வீ.சேகருக்கும்,ராஜாவுக்கும் ஒரு நியாமா என சர்ச்சை எழுந்தது .

இந்நிலையில், எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.இன்று காலை நீதிபதி தகில் ரமானி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் நீதிபதி சி.டி.செல்வம் அமர்வுக்கு கிடையாது என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார் .தலைமை நீதிபதிக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என கூறினார்.

இந்நிலையில், போலீஸால் தேடப்பட்டு வரும் எச். ராஜா ஆளுநர் பன்வாரிலாலை திடீரன சந்தித்தார் . அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: