இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .

விளம்பரங்கள்

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்,வீராங்கனைகளுக்கு வருடந்தோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது மத்திய அரசு .இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு ,பரிசீலனை செய்யப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது .அவர்கள் பரிசு பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள்.அதன்படி, வீரர்களுக்கு விருதுகள் இன்று ஜனாதிபதி கைகளால் வழங்கப்பட்டன .

இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கென வழங்கபடும் மிக உயரிய விருதான “கேல் ரத்னா ” விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் ,உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரருமான விராட் கோலிக்கும் ,பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுக்கும் மிக உயரிய விருதான “கேல் ரத்னா ” விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார் .

அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது .ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மந்தனா, டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் உள்பட 20 பேருக்கு வழங்கப்பட்டது .சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார் .

கிரிக்கெட்டில் இதற்க்கு முன்பு சச்சினும்,தோனியும் கேல் ரத்னா விருதினை பெற்றுள்ளார்கள் .பளு தூக்குதலில் இதற்கும் முன்பு மல்லேஸ்வரி,குஞ்சரணி ஆகியோர் பெற்றுள்ளனர் .விராட் கோலி விருதினை பெற்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது .அவர்கள் தங்களது மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர் .ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் விராட் கோலி தற்போது ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ‘.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: