20 கோடி லஞ்சம், அமைச்சர் விசயபாசுக்கருக்கு ஆப்பு ரெடி!!!

விளம்பரங்கள்

சுகாதாரத் துறை அமைச்சர் விசயபாசுகர்
தமிழ்நாடு : அமைச்சர் விசயபாசுக்கருக்கு ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித் துறை பரிந்துரைத்துள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விசயபாசுகர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர். விசயபாசுகர் வீட்டிலிருந்து ராதா கிருட்டிணன் நகர் இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில் விசயபாசுகரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள அவர் வீட்டில் ரூ 20 லட்சம் பணம் மொத்தமாக கைப்பற்றப்பட்டது. பல கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசயபாசுகர் உதவியாளர் சீனுவாசனிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியிலிருந்து ஆயிரம் மடங்கு அதிகமாக கற்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல் செவிலியர் கல்லூரிகள், பாரா மெடிக்கல் கல்லூரிகள் ஆகியவற்றை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கவும் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளது குறித்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சோதனையில் சிக்கிய லஞ்சப்பணம் குறித்து அமைச்சர் விசயபாசுகரின் தந்தை சின்னத்தம்பியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தரவும் பலரிடம் லஞ்சம் பெற்றதை அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார் எனவே லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அமைச்சர் விசயபாசுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை வழக்கம் போல் அமைச்சர் விசயபாசுகர் மறுத்துள்ளார், இதனால் பாரதீய சனதா ஆதரவில் தொங்கி கொண்டிருக்கும் அதிமுகா ஆட்சி ஆட்டம் காண உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: