தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா! – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்

விளம்பரங்கள்

“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, கருணை அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்கியதை வரவேற்கிறேன்” என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

மதுரையில், காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் அண்ணா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்துக்கு அமித்ஷா வருகையால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அவர்களுடன் கூட்டணி பேசக்கூட கட்சிகள் முன்வரவில்லை. அமித்ஷா தமிழகத்தில் ஊழல் இருப்பதாகக் கூறி, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளார். தமிழக அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாக, தமிழக மக்களை ஊழல்வாதிகளாகக் கூறியிருப்பதை காங்கிரஸ் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். நடப்பது அ.தி.மு.க ஆட்சி என்பதால், அ.தி.மு.க, பி.ஜே.பி-க்கு அடிபணிந்து இந்த விசயத்தைக் கண்டிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு சமாதிகட்டிவிட்டதாக ஜெயக்குமார் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு, அந்த அனுதாபத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வு, மிகுந்த குழப்பத்துடன் நடந்துவருகிறது. நிரந்தரமாக இல்லாவிட்டாலும், குறைபாடுகளைச் சரிசெய்யும் வரையாவது தள்ளிவைக்க வேண்டும். நீட் தேர்வில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தற்போதைய தீர்ப்பை வரவேற்கிறேன். லோக் ஆயுக்தாவில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: