அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!! நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை!

பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!! நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை!

பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!! நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை! post thumbnail image
பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, ‘மோசக் பொன்சிகா’ என்ற சட்ட நிறுவனம் தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்கள், ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமானது. இதில் அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப்பும் அவரின் குடும்பத்தினரும் லண்டனில் சொத்துகள் வாங்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை பாகிஸ்தான் கோர்ட் நியமித்தது.

இக்குழு முன்பு நவாஸின் மகள் மரியம் ஷெரீஃப் (43), இவரின் கணவர் முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீஃப் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களிடம் குழுவினர் பல கட்டங்களில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. நீதிபதி முகமது பஷீர் தீர்ப்பை வெளியிட்டார். அதில் நவாஸ் ஷெரீஃப்க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மகள் மரியம் ஷெரீஃப்-க்கு 7 ஆண்டுகள் சிறையும் வழங்கி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி