செய்திகள்,திரையுலகம்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் முதல் முறையாக ‘அலெக்சா எல் எப்’ சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகம் ஆகிறது !!

முதல் முறையாக ‘அலெக்சா எல் எப்’ சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகம் ஆகிறது !!

முதல் முறையாக ‘அலெக்சா எல் எப்’ சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகம் ஆகிறது !! post thumbnail image
சென்னை : ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் படத்தில், அலெக்சா எல் எப் என்ற அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே இக்கேமராவை முதன்முறையாக இப்படத்திற்குத் தான் உபயோகப்படுத்த உள்ளனர். சீமராஜா படத்தைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் சிவகார்த்திக்கேயன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் இப்படத்தை அலெக்சா எல் எப் (AlexaLF) என்ற கேமராவைக் கொண்டு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். அதிநவீன கேமராவான இது இந்திய சினிமாவில் இதுவரைப் பயன்படுத்தப்பட்டதில்லை. முதன்முறையாக இந்தப் படத்திற்காகத் தான் இந்தியாவில் இக்கேமரா அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமை விரும்பியான நிரவ் ஷா, இது ஒரு சயின்ஸ பிக்சன் படம் என்பதால் அலெக்சா எல்எப் கேமராவை பயன்படுத்த முடிவு செய்துள்ளார். பெரும் பொருட்செலவில் உருவான ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்துக்கு அலெக்சா எல்எப் கேமரா தான் பயன்படுத்தப்பட்டது. இந்த கேமராவால் எந்த ஒரு பொருளையும் முப்பரிமாண வடிவில் மிக துல்லியமாக படம் பிடிக்க முடியும்.

அதோடு, சிவகார்த்திக்கேயனின் இந்தப் படத்தில் மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. அதாவது சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு நெஞ்சினிலே, என் சுவாசக் காற்றே உள்ளிட்ட படங்களில் நடித்த இஷா கோபிகர் மீண்டும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி