அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் போராட்டங்களை முறியடிப்போம் : முதல்வர் பழனிசாமி

போராட்டங்களை முறியடிப்போம் : முதல்வர் பழனிசாமி

போராட்டங்களை முறியடிப்போம் : முதல்வர் பழனிசாமி post thumbnail image
தமிழகத்தில் எத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம் என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

சேலம் – சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் 90 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து முதல்வர் பேசினார். அதில் சேலம் சாலை போராட்டம், காவிரி ஆணைய கூட்டம், காவிரியில் கர்நாடகாவில் நிலைப்பாடு குறித்து பேசினார்.

அதில், காவிரி தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கு தொடர முடியாது. இப்போதுதான் அதில் இறுதி தீர்ப்பு வந்துள்ளது. இனி காவிரி ஆணையம்தான் இறுதி முடிவுகளை எடுக்கும். தமிழகத்திற்கு காவிரி கிடைப்பதற்கான வழிகளை மத்திய அரசு செய்யும்.

செயல்படாத ஸ்டாலினை செயல் தலைவர் என்று சொல்கிறார்கள். அவர் சரியான எதிர்க்கட்சி தலைவர் போல செயல்படவில்லை. அவர் மக்களுக்கு உழைக்கவேயில்லை. தமிழகத்தில் மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக மட்டும்தான்.

தமிழகத்தில் எத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம்.போராட்டங்களை முறியடிக்கும் வல்லமை அதிமுகவிற்கு உள்ளது. 31,000 போரட்டங்களை அரசு கடந்த ஒரு வருடத்தில் முறியடித்துள்ளது. மக்களை பொய் சொல்லி எதிர்க்கட்சி தூண்டிவிடுகிறது. என்ன போராட்டம் வந்தாலும் அரசு அதை ஒடுக்கும்.

இங்கு அரசுக்கு எதிராக பேசி வருகிறார்கள். எதிர்கட்சியுடன் சிலர் சேர்ந்து கொண்டு அரசை கலைக்க பார்க்கிறார்கள். யார் நினைத்தாலும் அதிமுக அரசை கலைக்க முடியாது. 8 வழி சாலைக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது.இந்த சாலைக்கு எந்த கமிஷனும் வாங்கப்படவில்லை. திமுகதான் சாலை போட்ட போது கமிஷன் வாங்கியது. அதிமுக சதவிகித கமிஷன் வாங்குவதாக கூறுவதும் முழுக்க முழுக்க பொய், என்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி