தூத்துக்குடியில் 13 மரணத்திற்கு காரணம் தி.மு.க : பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் குற்றச்சாட்டு.

விளம்பரங்கள்

தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் சட்டசபையில் ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்காமல் வெறும் வெளிநடப்பு மட்டுமே செய்வதாகவும் சாடியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மீனவ சகோதரர்கள் போராட்டத்தினை திசை திருப்பக்கூடிய அளவிற்கு மக்கள் அதிகாரம் அமைப்பு செயல்பட்டது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் தமிழகத்தில் செயல்படுவதாக நான் பலமுறை குற்றம் சாட்டி வருகிறேன். இப்போது அது வெளிவந்துள்ளது. இந்த அமைப்பை தடை செய்வதோடு மட்டுமல்ல, வேரோடு அகற்ற வேண்டும். தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.வும் காரணம். சட்டசபையில் ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்காமல் வெளிநடப்பு மட்டுமே செய்கின்றனர். உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை என இதுவரை ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கும் மறைமுக கூட்டணி இருக்குமோ என சந்தேகமாக உள்ளது. டெல்லியில் 16 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது எந்தவித எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்புகள் பெருகி வருகின்றன. முன்னேற்றம் வரவேண்டுமானால் சிலவற்றை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அப்போது தான் தமிழகம் முன்னேறும். 8 வழி சாலை திட்டத்தால் நல்ல பலன் தமிழகத்துக்கு கிடைக்கும். இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதைபற்றி முதல்வர்தான் விளக்கம் தர வேண்டும். உலகில் தலை சிறந்த நடிகராக திகழ்ந்த சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக, தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நடிப்புத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், துணை நடிகர்களுக்கு சிவாஜி பெயரில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: