செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அசுரவதம் சினிமா விமர்சனம்

அசுரவதம் சினிமா விமர்சனம்

அசுரவதம் சினிமா விமர்சனம் post thumbnail image
“7 ஸ்கிரீன் ஸ்டுடியோ ” எல்.கே.லீனா தயாரிப்பில் சசிகுமார் ,நந்திதா, எழுத்தாளர் வசுமித்ரா உள்ளிட்டோர் நடிக்க ., மருதுபாண்டியன் இயக்கத்தில்., ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை மையக்கருவாக கொண்டு செம ஆக்ஷன்- ரியாக்ஷன் படமாக காட்சிப்படுத்தப்பட்டு வெளி வந்திருக்கிறது “அகரவதம்.”

திண்டுக்கல் பக்கம் ஒரு கிராமத்தில் ., மளிகைக் கடை வைத்திருக்கும் வசுமித்ராவிற்கு நாயகன் சசிகுமார் போன் செய்து ஒரு வாரத்தில் சாக போகிறாய்… அதுவரை நான் தர இருக்கும் சித்ரவதைகள் உனக்கு நித்தம் , நித்தம் … சாவாக இருக்கும் … என்று மிரட்டுகிறார். யார் ? என்று தெரியாத ஒருவர் போன் செய்து மிரட்டுவதால் வசுமித்ரா பதட்டமடைகிறார். மறுநாள் கடை வாசலில் நிற்கும் சசிகுமார், வசுமித்ராவை முறைத்து பார்த்தபடி நிற்க, இவன் தான் தன்னை மிரட்டியது என்று கண்டு கொள்கிறார்.

பின்னர் வசுமித்ராவை நடுரோட்டில் கொல்ல முயற்சித்து தப்பவைக்கிறார். பின்னர் பல முறை அவரை கொலை செய்ய முயற்சித்து வேண்டுமென்றே தப்பிக்க விட்டு அவருக்கு மரண பயத்தை காண்பிக்கிறார் சசிகுமார்.

அதனால் தன் நண்பர்கள் மற்றும் தெரிந்த போலீஸ் மூலமாக சசிகுமாரை உயிருடன் பிடித்து தன்னை ஏன் சித்ரவதை செய்து இப்படி கொல்ல துரத்துகிறார் சசிகுமார் ? என தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார் …? வசுமித்ரா. சிக்காமல் இருக்கும் சசிகுமார், ஒருகட்டத்தில் வசுமித்ராவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.

இறுதியில் வசுமித்ராவிடம் சிக்கிக் கொண்ட சசிகுமார், உயிர் தப்பினாரா? எதற்காக வசுமித்ராவிற்கு மரண பயத்தை விடாமல் காண்பிக்கிறார்? அவரது வாழ்க்கையில் வசுமித்ராவால் நடந்த விபரீதம் தான் என்ன? என்பதே “அகரவதம்.” படத்தின் மீதிக்கதை

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி