அரசியல்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது

நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது

நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது post thumbnail image
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களை பதவி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதை எதிர்த்து 18 பேர் சார்பில தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், மற்றொரு நீதிபதியான எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பு மக்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி சுந்தர் தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என கூறி உத்தரவிட நிலையில் நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் தலைமை நீதிபதியின் உத்தரவில் இருந்து, இந்த வழக்கில் நான் மாறுப்பட்டு தீர்ப்பு அளிக்கிறேன். சபாநாயகரின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.
மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது. இதேபோன்ற பிரச்னையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழக்கை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஆளுனரை சந்தித்து மனு கொடுத்ததை அடிப்படையாக கொண்டு கட்சி தாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது. ஆளுநரை சந்தித்த 19 எம்எல்ஏக்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும், அவர்களில் பின்னர் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு ஒரு முடிவும் எடுத்துள்ளார் சபாநாயகர். மனுதாரர்களுக்கு அவர்களின் தரப்பு விளக்கங்களைக் கொடுக்க சட்டசபை தலைவர் உரிய வாய்ப்புகளைத் தரவில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது தெளிவாகிறது. அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதை குலைத்துவிடக் கூடாது. இந்த காரணங்களுக்காக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது, செல்லாது. இவ்வாறு நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தற்போதைய நிலை படி இந்த தீர்ப்பு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி