சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…

விளம்பரங்கள்

சிஸ்டம் சரியில்லை - ரஜினி
Super Star Rajini Makkal Mandram
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதம் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். வரும் பிப்.14, 15 மற்றும் 16 தேதிகளில் இந்த சந்திப்பு நடக்கிறது. ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார் குறிப்பாக சிஸ்டம் சரியில்லை தமிழகத்தில் என்கின்ற கருத்தை மக்கள் மத்தியில் வீசி தனது அரசியல் வருகையில் அறிவித்தார் . 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

சிஸ்டம் சரியில்லை – ரஜினி

அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. சமீபத்தில் அவர் வெளியிட்ட இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது ரஜினி தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். வரும் பிப்.14,15 மற்றும் 16 தேதிகளில் இந்த சந்திப்பு நடக்கிறது. ஏற்கனவே சில மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் மாவட்ட நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களுக்கு கூடிய விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சந்திப்பு நடக்கும் அதே தேதியில் தேதியில் தேனி, நீலகிரி மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் வெளியிட்டார். இதேபோல் இந்த சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: