எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..!

விளம்பரங்கள்

h1b-issues-trump
அமெரிக்காவில் எச்1-பி விசா மற்றும் குடியுரிமை நோக்கி காத்திருக்கும் இந்தியர்களுக்கு அடுத்தடுத்து டிரம்ப் தலைமையிலான அரசு சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அமெரிக்கப் பொருட்களையே வாங்குங்க, அமெரிக்கர்களையே பணிக்கு அமர்த்துங்கள் என்ற கோரிக்கை மிகவும் வலுப்பெற்று வருவதால் இந்திய மென்பொருள் வல்லுநர்களுக்குத் தலைவலியாக மாறியுள்ளது அதிபர் டிரம்ப்பின் ஆட்சி.

5,00,000 இந்தியர்கள் நாடு திரும்பும் நிலை

எச்1-பி விசா முறையில் ஏற்படுத்தி வரும் அதிரடி திருத்தங்களால் 5,00,000 இந்தியர்கள் நாடு திரும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்திய தொழிலதிபர் மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா அப்படியொரு நிலை ஏற்பட்டால் “ஸ்வாகதம், இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறேன்” என்று டிவிட் போட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பலரின் க்ரீன் கார்டு கோரிக்கைகள் நிலுவையில் இருக்கும் நிலையில் டிரம்ப் தலைமையிலான அரசு அவர்களை வெளியேற்றும் முடிவில் உள்ளதா செய்திகள் வெளியான அடுத்த நாளே ஆனந்த் மகேந்திரா போட்ட டிவிட்டானது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

எச்1-பி விசா, இனி குடியுரிமை காத்திருப்பு பயன்படாது

குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் உள்ள இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை மட்டுமே அமெரிக்காவில் இருக்க முடியும் என்கின்ற வகையில் புதிய சட்டம் வழிவகுக்கும் என்று தகவல்கள் வெளிவருகின்றன. greencard-id-cardஅமெரிக்காவில் 6 ஆண்டுகள் பணிபுரிந்த வெளிநாட்டினர் கிரீன்கார்டு உடனே கிடைக்காவிட்டால் சொந்த நாட்டிற்கு திரும்பி விட வேண்டும். பின்னர் கிரீன்கார்டு கிடைத்தால் மட்டுமே அமெரிக்காவுக்கு திரும்ப முடியும். இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்பவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அதிகப்படியாக உருவாக்க ஆயிரம் கணக்கில் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்கப் பொருட்களையே வாங்குங்க, அமெரிக்கர்களையே பணிக்கு அமர்த்துங்கள் என்ற வாசகத்தின் கீழ் வெளிநாட்டினருக்கான அமெரிக்காவில் வேலை செய்வதற்கான எச்1-பி விசா சேவையில் பல விதமான மாற்றங்கள் நிகழ உள்ளது.

English summary:- Buy American, Hire American Anand Mahindra’s irritate message to Indian techies: “Swagatam, Welcome Home, Buy American, Hire American”

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: