சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்

விளம்பரங்கள்

சீமான்
சென்னை: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார் சீமான். ரஜினியை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீமான். ரஜினி அரசியல் முடிவு பல முனைகளிலும் ஆதரவையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு

ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து எங்கள் பாட்டன் முப்பாட்டன்களை தோற்கடிச்சு எங்ககிட்ட அதிகாரம் செலுத்தியிருக்கலாம். அதுவே எங்களுக்கு ஒரு அவமானம். இனியும் தமிழ் தேசிய பிள்ளைகள் ரஜினியின் வலையில் மாட்ட மாட்டார்கள். கொள்கை என்ன என்று கேட்டாலே அப்படியே ஆடிவிட்டேன் என்று ரஜினியே சொல்கிறார். கொள்கை இல்லாத அரசியல் பாவம் என்கிறார் காந்தி.

ரஜினிகாந்தின் பாபா முத்திரை

ரஜினிகாந்த் பாஜகவின் ஆள் தான். அதனால் தான் தாமரையுடன் கூடிய பாபா முத்திரை பேனரை வைத்துள்ளார் என்று ஆளாளுக்கு விமர்சிக்கத் துவங்கினர். ரஜினிமன்ற இணையதளத்திலும் சரி, ஆப்பிலும் சரி பாபா முத்திரை மட்டுமே உள்ளது, தாமரையை கழற்றவிட்டுவிட்டார். இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்ற நினைக்கும் பாஜக ரஜினி மூலம் பின்வழியாக வரப் பார்க்கிறது என்று மீம்ஸ்கள் போட்டு பலர் சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

காந்தி சொன்ன 1௦ பாவம்

காந்தி சொன்ன 10 பாவங்களில் முதல் பாவமே கொள்கை இல்லாத அரசியல்தான். ஐம்பது ஆண்டுகாலம் திராவிட கட்சிகளிடம் சீரழிந்த தமிழகத்தை மராட்டிய ரஜினியிடம் கொடுத்து போராட முடியாது அவரை நாங்கள் வலிமையாக எதிர்போம் என்று சீமான் ஆவேசமாக கூறினார்.

English summary:- Naam tamilar Seeman attacking Rajinikanth in all sides, he is not accepting Rajinikanth as Tamilan and he told he will give tough fight against Rajini in the political battle field. He given interview to news18 tamil channel and shared various reason why Rajini should not be support by tamils.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: