ரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்

விளம்பரங்கள்

இரும்புத்திரை திரைபடத்தின் திரைப்பட தளங்களில் நடந்த சுவையான நிகழ்சிகளை ரோபோ சங்கர் பகிர்ந்து கொண்டார, மேலும் தன் இம்சை தாங்க முடியாமல் விஷால் தன்னை திட்டியதாக ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இரும்புத்திரை படம் வரும் சனவரி மாதம் 26ம் தேதி உலகெங்கும்ரி பிரமாண்டமாக திரையிடப்படுகிறது . இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது இதில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் “இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும், விஷால் சாருக்கும் நன்றி, ஒரு நடிகர், கதாநாயகன் என்பதை தாண்டி விஷால் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும் ரொம்ப உதவும் குணம் உள்ள நல்ல மனிதர் விஷால். இரவும், பகலும் ஷூட்டிங் நடந்தாலும் தொலைப்பேசி வந்து கொண்டே இருக்கும். உடனே எடுத்துப் பேசி உதவி செய்ய ஏற்பாடு செய்வார். அதற்காகவே அவருக்கு ஒரு சல்யூட். ஒரு சீரியஸான காட்சியை படமாக்கும்போது அனைவரும் சீரியஸான மூடில் இருப்போம். அப்போது விஷால் என்னிடம் வந்து இந்த சீனை எப்படி பண்றேன்னு பாருங்க ரோபோ என்று சொல்லிவிட்டு செல்வார். கட் பண்ணா அவ்ளோ சீரியஸான, எமோஷலான ஒரு சீனை காமெடியாக்கி தெறிக்கவிட்டு அதன் பிறகு நாம் மறுபடியும் அந்த சீனில் நடிக்கவே முடியாது. அந்த மாதிரி கிட்டத்தட்ட 28 டேக் எல்லாம் எனக்கும், அவருக்கும் போயிருக்கு. என்னை அசிங்கமா கழுவிக் கழுவி எல்லாம் ஊத்தியிருக்கிறார். தயவு செய்து ரோபோவை வெளியே அனுப்புங்க, ஏன் இப்படி பண்ணுகிறார்னு பாருங்க என்று என்னை அவ்ளோ திட்டியிடிருக்கிறார் என்றார் ரோபோ சங்கர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: