தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்

ஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்

ஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம் post thumbnail image
ஃபேஸ்புக் லைவ் தற்போது மிக பிரபலமாக இருக்கிறது, இந்த நிலையில் ஃபேஸ்புக் லைவ்-இல் ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு புதிய வசதிகளை கூடுதலாக அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் லைவ்வில் நண்பர்களுடன் பேசுவதற்கு வழிவகை செய்துள்ளது, லைவ் வித் என்கின்ற கூடுதல் வசதியையும் நண்பர்களுடன் பேசுவதில் எளிதாக இணைக்க வழிவகை செய்துள்ளது. இந்த இரண்டு புதிய வசதிகளும் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களுடைய எண்ணங்களை நண்பர்களிடத்தில் பகிரவும், அதே நேரத்தில் நண்பர்களை நேரடியாக இணைக்கவும் உதவுகிறது. நண்பர்களுடன் லைவ் சேட் என்ற வசதி நேரடியாக ஒளிபரப்பு ஆகி கொண்டிருக்கும் போதே நீங்கள் உங்கள் நண்பரை சாட் செய்ய அழைக்கலாம். நீங்கள் இருக்கும் அதே நேரடி ஒளிபரப்பில் உங்கள் நண்பரும் இருந்தால் அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமே இல்லை, உங்களுடன் தனிப்பட்ட சாட்டிற்கு அவரை உடனடியாக இணைத்து கொள்ளலாம்.

மேலும் ஃபேஸ்புக் மெசஞ்சரில் சாட் செய்து கொண்டிருக்கும்போதே நீங்கள் பொது உரையாடலிலும் எந்த நேரத்திலும் கலந்து கொள்ளலாம். இந்த வசதி தற்போது சோதனை வடிவத்தில் இருப்பதால் ஒருசில நாடுகளில் மட்டும் தற்போதைக்கு இயங்கி வருவதாகவும், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் போன்களில் செயல்படும் இந்த வசதி விரைவில் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றப்படும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நண்பர்களை லைவ் வீடியோ சாட்டிற்கு அழைக்கும் இந்த வசதியை ஐஒஎஸ் போன் உள்ளவர்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம் நீங்கள் லைவ் வித் ஆப்சனை பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் தான் லைவ் வியூவர்ஸ் செக்சனுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். இந்த வியூவர் செக்சனில் நீங்கள் யாருடன் சாட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த பெயரை டேப் செய்ய வேண்டும். அதே நேரத்தில் உங்கள் அழைப்பை உங்களது நண்பர் ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் அவரது விருப்பம். அவர் விரும்பவில்லை என்றால் நீங்கள் அவருடன் சாட் செய்ய முடியாது. மேலும் நேரடி வீடியோவில் சேர அழைக்கப்பட்ட நண்பர், நீங்கள் இருக்கும் இடத்தில் அதே இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இந்த வசதியில் வீடியோவை நீங்கள் போர்ட்ராய்டு மற்றும் லேண்ட்ஸ்கேப் என இரண்டு வகையிலும் வைத்து சாட் செய்யலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி