மராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…

விளம்பரங்கள்

ரஜினிகாந்தின் காலா கரிகாலன் என்கின்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மராட்டிய மாநிலம் மும்பையில் தொடங்கியது. ரஜினிக்கு பா.ரஞ்சித் படத்தின் காட்சிகளை விளக்குவது போன்று சில புகைப்படங்கள் இடம் பெற்ற காட்சிகள் இணைய தளங்களில் பரவி வருகின்றது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் மகிழ்ச்சியில் உள்ள அவர் ரசிகர்கள் புதிய படம் தொடக்கத்தால் மேலும் மகிழ்ச்சியாக உள்ளனர். வெற்றி திரைப்படமான கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித்தே இந்த புதிய திரைப்படமான காலாவையும் இயக்குகிறார், இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

காலா படப்பிடிப்காக ரஜினி நேற்று சென்னையிலிருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார். வெளியிடப்பட்ட சில புகைப்படங்களில் ரஜினிக்கு ரஞ்சித் காட்சிகளை விளக்குவது போன்ற படமும், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் ரஜினியுடன் நடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வெகு வேகமாக பரவி வருகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: