அனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா

விளம்பரங்கள்

பாரதீய சனதா கட்சித் தலைவர் அமித் ஷா, ஊடகங்கள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதைப் பற்றி மட்டும் தான் குறை கூறுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். பாரதீய சனதா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுக் காலம் கடந்ததை குறிக்கும் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமித் ஷா, இந்தியாவில் மிகப் பெரிய மக்கள் தொகைக்கு இருப்பதால் அனைவருக்கும் வேலைவாய்பை உத்தரவாதமளிக்க முடியாது என்று உரையாற்றியுள்ளார்.

இந்தியாவில் அனைவருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலைவாய்ப்பு வழங்க முடியாது ஆகையால் நாங்கள் சுய வேலை வாய்ப்பினை தான் ஊக்குவிக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்தியாவை ஆளும் பாரதீய சனதா கட்சியின் தலைவரான அமித் ஷா தொடர்ந்து ஐடி, வங்கி மற்றும் தொழிற்துறை நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் அனைவருக்கும் வேலை அளிப்பது முடியாத காரியம் என்ற இவர் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு குறைந்து வருவது குறித்துக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவது குறித்துக் கருத்து தெரிவித்த அமித் ஷா ஒரு வேலை காங்கிரஸ் கட்சி அவர்கள் பத்து வருட ஆட்சி காலகட்டத்தில் எந்த அளவு வேலை வாய்ப்பு இருந்தது என்று வெள்ளை அறிக்கை விட்டு இருக்குமா, அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆட்சியைக் கைவிட்டு இருக்க மாட்டார்கள் அள்ளவா என்று கிண்டலாகப் பதில் கூறினார்.

2014-ம் ஆண்டு எப்படிப் பாரதீய சனதா கட்சி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்ததோ அதே போன்று 2019-ம் ஆண்டும் அதை விடப் பிரம்மாண்டமான முறையில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: